ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

தொடங்கிவிட்டேன் எழுத !

சரியாக ஒரு வருடம் கடந்து விட்டது, நான் மீண்டும் இங்கு வர. செந்திலுக்கு நன்றி! இப்பூவுலகில் உயிர்களின் வாழ்வு தொடங்கும் பிறப்பிலிருந்தே நானும் என் கதையைத் தொடங்குகிறேன். அம்மனுக்கு ஆரவாரமான காற்றுக்கு பெயர்போன ஆடித்திங்களில் ஒரு செவ்வாய் கிழமை, அமாவாசை தினத்தன்று முதன்முதலில் இந்த உலகத்தின் பார்வையில் விழுந்தேன். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம்நாள், 1986 ஆம் வருடம் - இது தான் எனது பிறந்த நாள் என்று எளிதாகவும் கூறியிருக்க இயலும் :) கதை கடலூரில் உள்ள ஜானகி அம்மாள் மருத்துவமனையில் தொடங்கியது ! என் பிறப்பு ஒரு விழா போல இருந்ததாக இன்றும் என் தாத்தா நினைவு கூர்கிறார் :) அதற்கு காரணம் என்னவென்று விளக்கும் அதே வேளையில் என் பெற்றோரைப் பற்றியும் அவர்களது குடும்பத்தைப் பற்றியும் சில வரிகள்...

அம்மா! உறவுமுறைகளுக்கு அப்பாற்பட்ட உயிர். அவரது பெயர் கௌசல்யா என்று அமைந்ததும் எனது பெயர் ஸ்ரீராம் என்று அமைந்ததும் வெறும் தற்செயலானது மட்டுமே என்று இன்று வரை எனக்குத் தோன்றவில்லை! அவருக்கு மூன்று தம்பியர், ஒரு தங்கை. இவர்கள் ஐவரோடு எனது தாத்தா, பாட்டி, பாட்டியின் பெற்றோர் என ஒரு பெரிய குடும்பத்தில், அடுத்த சந்ததியின் முதல் குழந்தையாக பிறந்து அவர்களை மகிழ்சிப் பெருக்கில் ஆழ்த்தியது தான் அந்த காரணம்!

அப்பா! அவரது அண்ணன், எனது தாத்தா, பாட்டி என நால்வர் மட்டுமே கொண்ட சிறிய குடும்பம் அவரது. என் மீது உயிராய் இருந்த இந்த பாட்டி, அதை நான் உணர்ந்து கொள்ளும் முன்பே புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமாகிவிட்டார்.

என்ன தான் ஆரவாரத்தோடு பிறந்தாலும், இன்றளவும் என் மீது பாசத்தைப் பொழியும் இவர்களோடு இருந்து வளரும் வாய்ப்பைப் பெறக் கொடுத்துவைக்கவில்லை :( சிறிது காலத்திலேயே எனது பயணம் சென்னையை நோக்கி விரைந்தது. சென்னையில் சந்திப்போம் :)

1 கருத்து:

Senthil Kumar Vasudevan சொன்னது…

நல்லா ஆரம்பிச்சுருக்க.. அப்படியே இன்னும் நிறைய எழுதணும்.. சொந்தக்கதை மட்டுமில்ல.. ;P

கருத்துரையிடுக